மைக்ரோசாப்ட் புதுவரவு: சர்ஃபேஸ் லேப்டாப், விண்டோஸ் 10S

மைக்ரோசாபட் நிறுவனத்தின் EDU விழாவில் புதிய சர்பேஸ் ப்ரோ, விண்டோஸ் ஓஎஸ் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MicrosoftEDU நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று மைக்ரோசாப்டின் புதிய சர்பேஸ் லேப்டாப், புதிய இயங்குதளம் மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு சேவைகள் மற்றும் மென்பொருள்கள் இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆப்பிளின் மேக்புக் ஏர் சாதனத்திற்கு போட்டியாக புதிய சர்ஃபேஸ் லேப்டாப் ஒன்றை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்டின் பாரம்பரிய கிளாம்ஷெல் வடிவமைப்பு மாற்றப்படவில்லை எனினும், சர்பேஸ் பெயரில் அறிமுகமான ஹைப்ரிட் டேப்லெட்-லேப்டாப் வடிவமைப்பு மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப்:
புதிய சர்ஃபேஸ் லேப்டாப்பில் இன்டெல் கோர் i5 சிபியு, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஹார்டு டிரைவ் மற்றும் 14 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 இன்ச் அளவு கொண்ட புதிய சர்ஃபேஸ் ப்ரோ மேக்புக் ப்ரோவை விட எடை குறைவாகவும், தொடுதிரை டிஸ்ப்ளே மற்றும் சர்ஃபேஸ் பென் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் சில்வர், கோல்டு, பர்கண்டி மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப்புடன் புதிய விண்டோஸ் 10S இயங்குதளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக இயங்குவதோடு பாதுகாப்பானதாகவும் இருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. முந்தைய சர்ஃபேஸ் லேப்டாப்களை விட அதிவேகமாக லோடு ஆவதோடு, நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிய சர்பேஸ் லேப்டாப் 999 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.64,080 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10S:
விண்டோஸ் 10S இயங்குதளத்தில் மைக்ரோசாப்ட் செயலிகளை மட்டுமே பயன்படுத்த முடியும், இத்துடன் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை மட்டும் இன்ஸ்டால் செய்ய முடியும். கல்வியை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய லேப்டாப்பில் கிளாஸ்ரூம் சாட் குரூப், அசைன்மென்ட் சப்மிஷன்கள் மற்றும் மாடரேஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10S இயங்குதளம் வைத்திருப்போர் முழுமையான விண்டோஸ் ப்ரோ பதிப்பிற்கு அப்டேட் செய்ய முடியும், ஒருமுறை அப்டேட் செய்தால் மீண்டும் பின்செல்ல முடியாது. அப்டேட் செய்ய 49 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,143 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ தவிர ஏசர் மற்றும் எச்பி உள்ளிட்ட சாதனங்களிலும் புதிய விண்டோஸ் 10S இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
மைன்கிராஃப்ட்:
மாணவர்களிடையே கோடிங் பாடத்தை எளிமையாக்க மைக்ரோசாஃப்டின் மைன்கிராஃப்ட் பயனுள்ளதாக இருக்கும் என்றும், கோடிங் மற்றும் கேம்களை உருவக்க வழி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இத்துடன் டின்க்கர், ஸ்கிராட்ச்X உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மைக்ரோசாப்டின் மேக்கோடு (makecode) எனும் தளம் கொண்டு ஜாவா ஸ்கிரிப்ட்களை கற்பிக்க முடியும். மாணவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு இலவச சந்தா வழங்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
மிக்சட் ரியாலிட்டி:
மைக்ரோசாப்டின் மிக்சட் ரியாலிட்டி மூலம் மாணவர்களுக்கு விர்ச்சுவல், ஆக்மென்ட்டெட் மற்றும் மிக்சட் ரியாலிட்டிக்களை வகுப்பறைகளில் கொண்டு சேர்க்க முடியும். 3D பொருள்களை நிஜத்தில் உருவாக்கி அவற்றை மிக்சட் ரியாலிட்டி அல்லது திரையில் நேரடியாக பார்க்க முடியும்.
இதற்கென மைக்ரோசாப்ட் நிறுவனம் பியர்சன் எட்யூகேஷனுடன் இணைந்து 3D மற்றும் மிக்சட் ரியாலிட்டி சாதனங்களை விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இவற்றில் வரலாறு, அறிவியில், கணிதம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=74kPEJWpCD4