பத்து கிலோ அதிகரித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்!

எப்போது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் கேரக்டருக்காக, தன் உடல் எடையை பத்து கிலோ அதிகரித்திருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

நடிகை ஸ்ருதிஹாசன், இந்தியில் நடித்து வரும் படம், ’பேஹன் ஹோகி தேரி’. ராஜ்குமார் ராவ், குல்ஷன் குரோவர் உட்பட பலர் நடித்துள்ளனர். அஜய் கே.பன்னாலால் இயக்கும் இந்தப் படத்தில் பஞ்சாபி பெண்ணாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

‘கதைப்படி ஸ்ருதி குடும்பம், சாப்பாட்டு பிரியை குடும்பம். எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஸ்ருதியும் எதையாவது தின்றுகொண்டே இருப்பார்.

இதற்காக அவர் உடல் எடையை பத்து கிலோ வரை அதிகரிக்க வேண்டும் என படக்குழு கூறியது. எப்போதும் உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கும் ஸ்ருதி, படத்துக்காக டயட்டுக்கு டாட்டா சொல்லிவிட்டு உடல் எடையை அதிகரித்துள்ளார்’ என்று படக்குழு கூறியது.

கமல்ஹாசன்தான் படங்களுக்காக உடல் எடையை அதிகரிப்பதையும் குறைப்பதையும் வழக்கமாக வைத்திருப்பார். இப்போது அவர் மகளும் அதே பார்முலாவை பின்பற்றுவதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.