தன்னை பெற்று வளர்த்து பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆளாக்கிய தாயை வெறுத்து ஒதுக்கிவிட்டு, நேற்று வந்த சிற்றன்னையிடம் பாசத்தை பொழிய முடியுமா ஒரு மகளால்..? அதிலும் தன் தாய் உயிரோடு இருக்கும்போதே அவரை விவாகரத்து செய்துவிட்டு, தனது தந்தை திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணை நேசிக்க முடியுமா ஒரு இளம்பெண்ணால்..? இதோ நிஜ வாழ்வில் அதை சாத்தியம் என நிரூபித்துக்கொண்டு இருக்கிறார் மலையாள நடிகர் திலீப்-மஞ்சு வாரியருக்கு மகளாக பிறந்து, தற்போது தனது அம்மாவை ஒதுக்கிவிட்டு சிற்றன்னை காவ்யா மாதவனுடனேயே வாழ்ந்துவரும் மீனாட்சி.
மலையாள நடிகை மஞ்சு வாரியர் சிறந்த நடிகை.. ஆனால் ஒரு அம்மாவாக தனது மகளை அவரால் தனது பக்கம் இழுத்துக்கொள்ள அவரிடம் போதுமான நியாயம் இல்லை என்பது தான் மீனாட்சியின் எண்ணம்.. அதனால் தான் தனது பெற்றோர் பிரிந்து வாழ முடிவெடுத்த காலத்தில் இருந்து இன்றுவரை தனது தந்தை திலீப்பின் செயல்களுக்கு மட்டுமே ஆதரவாக இருந்து வருகிறார் மீனாட்சி. அதேசமயம் இன்றுவரை கூட தனது தாயின் வீட்டிற்கு சென்று அவரை மீனாட்சி பார்க்கவில்லை என்றே சொல்கிறார்கள்.
திலீப்புடன் இணைத்து அளவுக்கதிகமாக மீடியாவில் கிசுகிசுக்களுக்கு ஆளான நடிகை காவ்யா மாதவனை தனது தந்தைக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து அதை முன்னின்று நடத்தி வைத்தவரும் இந்த மீனாட்சி தான்..
காவ்யா மாதவன் திலீப் வீட்டில் அடியெடுத்து வைத்தபின் மீனாட்சியின் முக்கியத்துவம் குறைந்துவிடும், காவ்யா மாதவனிடம் மாற்றாந்தாய் மனப்பான்மை தலைதூக்கிவிடும் என்றே பலரும் ஆருடம் சொல்லிவந்தனர்.
. ஆனால் எந்த சூழலில் மீனாட்சி தனது தாயையே ஒதுக்கிவிட்டு, தன்னை அன்னையாக ஏற்றுள்ளார் என்பதை காவ்யா மாதவன் நன்கு புரிந்துகொண்டுள்ளதால் மீனாட்சியுடன் ஒரு நல்ல தோழியாகவே பழகி வருகிறாராம்.
ஹனிமூன் ட்ரிப் உட்பட தானும் தன் கணவனும் செல்லும் பல இடங்களுக்கும் மீனாட்சியையும் தவறாமல் அழைத்து செல்கிறார்.
இதோ தற்போது திலீப் ஷோக்காக அமெரிக்காவில் முகாமிட்டிருக்கும் திலீப்பை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக காவ்யா மாதவன், மீனாட்சி இருவரின் பாசப்பிணைப்பு இறுகியுள்ளதை மேலே உள்ள புகைப்படமே சாட்சியாக சொல்கிறதே.