ஆனந்தசாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லென்ஸ்’ படம் சமூக வலைத்தளங்களின் ஆபத்தை சொல்லும் படம் என்று இயக்குநர் தெரிவித்துள்ளா்.
கிராஸ் ரூட் பிலிம்ஸ், மினி ஸ்டுடியோ நிறுவனங்கள் வழங்கும் படம் ‘லென்ஸ்’.
இதில் ஆனந்தசாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அஷ்வதிலால், மிஷா கோஷல், ராஜாகிருஷ்ணன், உதயகுமார் உள்பட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது….
பொதுவாகவே மக் களுக்கு மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களை கூர்ந்து நோக்கி அறிந்து கொள்வதில் ஒரு தனி ஆர் வம் உண்டு. இது போன்ற எண்ணங்களும், நவீன தொழில் நுட்பங்களும் எவ்வாறு மனித வாழ்வை பாதிக்கின்றன என்பதை சொல்லும் படம் இது. எனவே, ‘லென்ஸ்’ என்று தலைப்பு வைத்தோம். மற்ற படங்களைப் போல் பாடல், காமெடி, காட்சிகளை தவிர்த்து கதைக்கு தேவையான காட்சிகளுடன் ‘லென்ஸ்’ உருவாகி இருக்கின்றது.
சமூக வலைதளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உண்மை சம்பவம் தான் ‘லென்ஸ்’ படத்தின் அடிப்படை. நல்ல கருத்தை சொல்லும் இந்த படத்துக்கு ரசிகர்கள் அங்கீகாரம் கிடைக்கும்” என்றார்.