உடல் எடையைக் குறைக்க உதவும் செயலி

சுவைமிக்க உணவுக்குப் பெயர்போனது சிங்கப்பூர். ஆனால் நாவிற்கு ருசியான அனைத்தும் நம் உடலுக்கு நல்லதல்ல

உணவையும், உடல் நலத்தையும் சீராகப் பேணிக்கொள்ள ஒரு செயலியை உருவாக்கியுள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த உணவு, ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் லிம் சூ லின்.

nBuddy எனப்படும் உணவுக் கட்டுப்பாடுச் செயலி ஆரோக்கியமற்ற உணவுகளுக்குப் பதிலாக சத்து மிகுந்த உணவுகளைப் பரிந்துரைக்கிறது.

கூகிள்பிலே (Google Play), ஆப்பிள் ஆப் ஸ்டோர் ( Apple App Store) இரண்டிலிருந்தும் செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் அதே வகையாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அது அடுத்த வாரம் சந்தையில் அறிமுகம் செய்யப்படும்.

சிங்கப்பூரர்களுக்குப் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்தச் செயலி, மற்ற செயலிகள் போல அல்லாமல், உண்ணும் உணவின் அளவு, அதற்கு பதிலான ஆரோக்கிய உணவுகள் ஆகிய தகவல்களை உடனுக்குடன் வழங்குகிறது.

இதனால் சாப்பிட்டப் பிறகு அளவுக்கு அதிகமாக உண்டுவிட்டோமோ என்ற அச்சம் இருக்காது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற உதவும் குறிப்புகளையும், அன்றாட உடற்பயிற்சி அளவையும் செயலி மதிப்பிடுகிறது.