கொக்கிளாயினில் சிங்கள மீனவர்களின் அட்டகாசம்!

கொக்கிளாய் கடற்பகுதியில் மீன்பிடிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையினில் இலங்கை இராணுவம் சகிதம் தடையினை சிங்கள மீனவர்கள் மீறி தொடர்ச்சியாக தொழில் செய்துவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

கொக்கிளாய் கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் செய்வதற்கான கரைவலைப்பாட்டின் உரிமம் தொடர்பான பிரச்சினை எழுந்த நிலையில் அது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றது. இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை பிரச்சினைக்குரிய கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

உழவு இயந்திரத்தை பயன்படுத்தும் சட்டவிரோத மீன்பிடியிலும் அவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு கரைத்துரைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மற்றும் அந்த பகுதிக்குரிய கிராம உத்தியோகத்தர் ஆகியோர் சென்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறிய மீன்பிடி செயற்பாடு குறித்து பிரதேச செயலக அதிகாரி மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டனர்.

எனினும் அதனை பொருட்படுத்தாத சிங்கள மீனவர்கள் தொடர்ந்தும் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு முன்னால் தமது ஆடைகளை களைந்து நிர்வாண கோலத்தில் நின்றுள்ளனர்.

சிங்கள மீனவர்களின் நீதிமன்ற உத்தரவை மீறிய சிங்கள மீனவர்களின் மீன்பிடிச் செயற்பாடு குறித்து தமிழ் மீனவர்கள் கொக்குகிளாய் காவல்; நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.