ஆசியாவில் உயரம் கூடிய வலைப்பந்தாட்ட வீராங்கனையான இலங்கையைச் சேர்ந்த தர்சினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட அணியில் மாத்திரமன்றி சர்வதேச அணி ஒன்றில் விளையாடுவதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.
இதற்கமைவாக தர்சினி அவுஸ்ரேலிய சிற்றி வெஸ்ற் பெல்கென்ஸ் மெல்பேன் மற்றும் புனித எல்பன்ஸ் ஆகிய அவுஸ்ரேலிய முன்னணி அணிகளுடன் விளையாடவுள்ளார்.
ஆறுமாத கால ஒப்பந்தஅடிப்படையில் இவர் இந்த அணியில் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அவுஸ்ரேலியாவில் விளையாடுவதற்கான பயிற்சிகளை முன்னாள் வலைப்பந்தாட்ட வீராங்கனையும் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான திலக்காக ஜெனதாச வழங்கியிருந்தார் என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிடுகினறன.
Eelamurasu Australia Online News Portal