அர்ஜெண்டினாவில் அஃகா மகுவோ என்ற தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்க்கருவுடனான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அர்ஜெண்டினாவில் உள்ள அஃகா மகுவோவின் தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பட்டகோனியா பகுதிக்கு வடக்கு பிராந்தியத்தில் உள்ள அஃகா மகுவோ தொல்பொருள் ஆராய்ச்சிக்கு பிரபலமான இடத்தில் தான் இந்த முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த முட்டைகள் இன்னமும் உயிர்க்கருகளுடன் தான் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் அளித்த தகவலை அடுத்து, அங்கு சென்று ஆராய்ச்சியாளர்கள், முட்டைகள் உள்ளிட்டவற்றை மீட்டதாக உள்ளூர் கலாச்சார பாரம்பரிய பணிப்பாளர் க்ளவுடியா டெல்லா நெக்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக அஃகா மகுவோ பகுதியில் கடந்த 1997-ல் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, தொடர்ந்து டைனசர் பற்றிய படிமங்கள் மற்றும் முட்டைகள் என கண்டெடுக்கப்படுவதால், அந்த பகுதியை பாதுகாக்கும் விதமாக அங்கு படிம ஆய்வியல் பூங்காவை அமைக்க அர்ஜெண்டினா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்காக அந்த பூங்கா திறக்கப்பட உள்ளதாகவும் நெக்ரா கூறினார். அஃகா மகுவோ பகுதியில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்ட முட்டைகள், தோல், பற்கள் என அனைத்தும் உயர் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 2014-ல் உலகின் மிகப்பெரிய ரைனோசரஸின் எழும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. அதன் மொத்த எடை 14 ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமமாக இருக்குமாம். அதாவது சுமார் 77 டன் எடையும், 40 அடி நீளமும், 65 அடி உயரமும் கொண்ட ரைனோசரஸ் எழும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.
இதில் சுமார் 150 எழும்புகள் எடுக்கப்பட்டதாகவும், அந்த எழும்புகள் பின்னர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அமெரிக்க தேசிய மியூசியமில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.