அப்பிள் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஐபேட் சாதனங்களை மாற்ற விரும்புவோருக்கு அந்நிறுவனம் புதிய ஐபேட் ஏர் 2 சாதனத்தை வழங்க முடிவு செய்துள்ளது.
அப்பிள் ஐபேட் நான்காம் தலைமுறை மாடல் பயன்படுத்துவோர் தங்களது சாதனத்தை மாற்ற விரும்பினால் புத்தம் புதிய ஐபேட் ஏர் 2 சாதனம் வழங்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. புதிய சாதனத்தை வாடிக்கையாளர்கள் அப்பிள் ஸ்டோர்களில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய அப்பிள் ஐபேட் சாதனம் இருப்பு இல்லாத காரணத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இது குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்த அறிவிப்பை வழங்க அப்பிள் ஊழியர்களிடம் அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐபேட் ஏர் 2 புதிய கோல்டு நிறத்தில் வெளியிடப்பட்டது. 32 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்பட்ட இந்த சானத்தின் 16 ஜிபி மற்றும் 64 ஜிபி மாடல்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பழைய சாதனத்தை வழங்கும் போது கூடுதல் மெமரியை பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபேட் ஏர் 2 சாதனத்தில் 9.7 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, 64-பிட் ஆப்பிள் A9 சிப்செட், ஐஓஎஸ் 10 இயங்குதளம், 8 எம்பி பிரைமரி கேமரா, ஃபேஸ்டைம் எச்டி கேமரா, டச் ஐடி தொழில்நுட்பம் கொண்ட கைரேகை ஸ்கேனர், வை-பை, 4ஜி எல்டிஇ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.