சந்திரன் போன்ற சனிகிரக துணைகோளில் உயிரினங்கள் வாழ முடியும்

சனிகிரக துணை கோளான லன்சீலாடஸ் என்ற சந்திரனை போட்டோ எடுத்து அனுப்பியது. அதை வைத்து ஆய்வு நடத்திய நாசா விஞ்ஞானிகள் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என கண்டறிந்துதுள்ளனர்.

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு மேற் கொள்ள ஆளில்லா ஹாசினி விண்கலம், ஹப்பிள்டெலஸ்கோப் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளது. அவை விண்வெளியில் உலாவரும் கிரகங்களை போட்டோ எடுத்து தெளிவாக பூமிக்கு அனுப்பி வருகிறது.

சமீபத்தில் வியாழன் கிரகத்தின் யூரோப்பா என்ற சந்திரனில் ஹைட்ரஜன் வாயு இருப்பதையும், அதனால் ரசாயன விளைவுகள் ஏற்படுவதால் அங்கு உயிரினங்கள் வாழமுடியும் என கண்டுபிடித்தது.

அது போன்று தற்போது சனிகிரக துணை கோளான லன்சீலாடஸ் என்ற சந்திரனை போட்டோ எடுத்து அனுப்பியது. அதை வைத்து ஆய்வு நடத்திய நாசா விஞ்ஞானிகள் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என கண்டறிந்துதுள்ளனர்.

லன்சீலாடஸ் துணை கோள் முழுவதும் ஐஸ்கட்டி நிறைந்தது. அங்குள்ள கடல் நீரில் கார்பன்டை ஆக்சைடும், ஹைட்ரஜனும் நிறைந்துள்ளன. அதில் இருந்து ஹைட்ரஜன் வாயு உள்ளிட்டவை வெளியாகிறது.

இதன் மூலம் அங்கு ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. அது உயிரினங்கள் வாழ தகுதியுள்ளது. பூமிக்கு அடுத்த படியாக இங்கும் உயிரினங்கள் வாழ முடியும் என நாசா விஞ்ஞானி தாமஸ் ஷூர்புஜென் தெரிவித்துள்ளார்.