பூமியை நோக்கி பாய்ந்து வரும் மிகப் பெரிய எரிகல் 19-ந்தேதி கடக்கும் என நாசா அறிவித்துள்ளது.
சூரியனை குறுங்கோள்கள் எனப்படும் விண் கற்கள் ஏராளமாக சுற்றி வருகின்றன. அவை திடீரென விலகி பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்களை கடந்து செல்கின்றன.
அது போன்ற ஒரு விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. கடாலினா ஸ்கைசர்வே நிறுவனத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் இதை கண்டறிந்தனர்.
இதற்கு 2014 ஜே.ஓ.25 என பெயரிடப்பட்டுள்ளது. அது 650 மீட்டர் அகலம் கொண்ட மிகப்பெரிய விண்கல். இது பூமியின் மீது மோதும் அபாயம் இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் அது பூமியை தாக்காது. வருகிற 19-ந்திகதி பூமியை கடந்து செல்லும் என நாசா அறிவித்துள்ளது. இது 18 லட்சம் கி.மீ. தூரத்திலேயே பூமியை கடக்கிறது.
இந்த விண்கல் சந்திரனை போன்று 2 மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal