பூமியை போன்ற கிரகத்தை சுற்றி தடிமனான வளிமண்டலம்

பூமியைப் போன்ற கிரகத்தை சுற்றி முதல்முறையாக வளிமண்டலத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்கு தடிமனான படலம் ஒன்று அந்த வளிமண்டலத்தை சுற்றி இருப்பதாகவும், அது நீராவியாகவோ அல்லது மீத்தேனாகவோ இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பூமியின் வளிமண்டலத்தை கண்டறிந்து அதன் தன்மைகளை ஆராய்வது என்பது நமது சூரிய குடும்பத்தை தாண்டி வேறு உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலில் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த கிரகத்தில்உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. காரணம், இதன் மேற்பரப்பு வெப்பநிலை 370 டிகிரி செல்சியஸை கொண்டுள்ளது.

விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்புகள் வானியல் நாளேட்டில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.