ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது. டெஸ்ட் தொடரை வெல்வது யார்? என்பதை முடிவு செய்யும் போட்டி என்பதால் இந்த டெஸ்ட் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் 2 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காயம் அடைந்த கப்டன் வீராட்கோலி, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு பதிலாக குல்தீப்யாதவ், புவனேஷ்வர் குமார் இடம் பெற்றனர். இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. அவுஸ்ரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மிகவும் முக்கியமான இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய கப்டன் சுமித் ‘டாஸ்’ வென்றார். அனைவரும் எதிர்பார்க்கும்படி அவர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
வார்னரும் ரென்ஷாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் 2 பவுண்டரிகளை அடித்தார்.
2-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் ரென்ஷாவை கீளின் போர்ட் ஆக்கினார். அடுத்ததாக அவுஸ்ரேலிய அணியின் கப்டன் சுமித் களம் இறங்கினார். வார்னரும் கேப்டன் சுமித்தும் பொறுப்புடன் ஆடி வருகின்றனர்.
தற்போது வரை அவுஸ்ரேலிய அணி 20 ஓவர் முடிவில் 83 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து ஆடி வருகிறது.