கேரளா அரசு வழங்கும் சினிமா விருதுகள் பட்டியலில் பின்னணி பாடகி சித்ரா சிறந்த பாடகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. தற்போது கேரள அரசின் 47-வது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு சிறந்த நடிகராக விநாயகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘கம்மட்டிப்பாடம்’ என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
‘அனுராக கரிக்கின்வெள்ளம்’ என்ற படத்தில் நடித்த ரெஜீசா விஜயன் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். சிறந்த படமாக ‘மேன்ஹோல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த டைரக்டருக்கான விருது ‘மேன்ஹோல்’ படத்தை இயக்கிய விது வின்சென்டுக்கு கிடைத்துள்ளது. சிறந்த இசை அமைப்பாளராக ஜெயச்சந்திரனும், சிறந்த பாடகியாக சித்ராவும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த பாடகராக சூரஜும், சிறந்த பாடலாசிரியராக குறுப்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகளை கேரள சட்டம் மற்றும் கலாச்சாரதுறை மந்திரி பாலன் அறிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal