நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும், தனுஷின் மனைவியும், இயக்குநருமான ஐஸ்வர்யா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா., சபையின் தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. சபையில் மகளிர் தின சிறப்பு விழாக்கள் நடைபெற இருக்கிறது.
இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் ஒருபகுதியாக, ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
இதற்காக தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஐஸ்வர்யா. தான் நடன பயிற்சி மேற்கொள்ளும் சிறு வீடியோ ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்திலும் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal