ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான வாட்ஸ்அப் பீட்டா செயலியில் புதிய எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு பதிப்புகளில் புதிய எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. யுனிகோட் 9.0 வழங்கும் புதிய எமோஜிக்கள் வாட்ஸ்அப் புதிய பதிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இதே எமோஜிக்கள் ஏற்கனவே ஐஓஎஸ் 10.2 மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளங்களில் வழங்கப்பட்டது.
புதிய எமோஜிக்களை பெற நீங்கள் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தினை பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான புதிய எமோஜிக்களில் ஆண் மற்றும் பெண் பல்வேறு புதிய பணிகளையும், வெவ்வேறு நிறங்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்த எமோஜிக்களில் கோமாளி முகம், துர்நாற்றம் முகம், செல்ஃபி, இரு பாலினத்தவரும் முகத்தை மூடிக் கொள்வது, நரி முகம், அவகாடோ, பேகான் போன்று பல்வேறு புதிய வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. சில எமோஜிக்களில் ஆங்காங்கே சில மாற்றங்களும் இருக்கின்றன.
உடனடியாக புதிய எமோஜிக்களை பெற வாட்ஸ்அப் பீட்டா பதிப்பினை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
Eelamurasu Australia Online News Portal