மிகவும் விரும்பப்படும் நடிகையாக தேர்வு செய்யப்பட்ட பிறகு பேட்டியளித்த சாய் பல்லவி நடிக்க முடியும் என்பது எனக்கே தெரியாது என்று கூறினார்.
‘பிரேமம்’ மலையாள படத்தில் நடித்து மூலம் பிரபலம் ஆனவர் சாய்பல்லவி. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கப்போவதாக கூறப்பட்ட இவர், முதன்முறையாக மாதவன் ஜோடியாக தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் ‘கொச்சிடைம்ஸ்’ பத்திரிகை 2016-ம் ஆண்டில் விரும்பப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றி ஆன்-லைனில் வாக்கெடுப்பு நடித்தியது. இதில் ரசிகர்களிடம் அதிக வாக்குபெற்ற நடிகை சாய்பல்லவி. நடிகர் சோவினோ தாமஸ்.
பந்தா இல்லாமல் எளிமையாக காட்சி அளிக்கும் இவரது தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது குறித்து சாய்பல்லவியிடம் கேட்ட போது….
“மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன். நான் மிகவும் விரும்பப்படும் நடிகையா என்பது தெரியவில்லை. ஆனால் என்னை தேர்வு செய்த ரசிகர்கள் இனிமையானவர்கள்.
‘பிரேமம்’ படத்தில் நான் நடித்தேன். ஆனால், இதுவரை என்னால் நடிக்க முடியும் என்பது எனக்குகூட தெரியாது. இப்போதும் அதை நம்ப முடியவில்லை.
நான் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தினமும் தியானம் செய்கிறேன். உடல் எடை அதிகரிக்கும் போது அதை கட்டுப்படுத்த யோகா செய்கிறேன். நான் சுத்த சைவம். கடந்த 3 ஆண்டுகளில் எனக்கு காய்ச்சல் வந்ததே இல்லை. தியானம்தான் இதற்கு காரணம்” என்றார்.
Eelamurasu Australia Online News Portal