இளம் நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ராதிகா.
90-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து பலரின் மனதை கொள்ளையடித்த நடிகைகளுள் ஒருவர் ராதிகா சரத்குமார். இவரது அர்பணிப்பும், சவாலான நடிப்பும் இவருக்கு பல முக்கிய விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. மேலும் ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது ராதிகா உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் `இப்படை வெல்லும்’ படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினின் அம்மாவாக வரும் ராதிகா, பேருந்து ஓட்டுநராகவும் நடித்துள்ளார்.
பேருந்து ஓட்டுநராக வரும் காட்சிகளில் ஓட்டுநர் இருக்கையில் நீங்கள் அமர்ந்தால் போதும். மற்ற காட்சிகளை கிராபிக்ஸ் செய்து கொள்ளலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனை மறுத்த ராதிகா, பேருந்து ஓட்ட 10 நாட்கள் பயிற்சி எடுத்து கொண்டார். பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பேருந்தையும் ஓட்டி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியதுடன், அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இது மற்ற இளம் நடிகை, நடிகைகளுக்கு ஒரு உதாரணம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தை `தூங்கா நகரம்’ புகழ் இயக்குநர் கௌரவ்நாராயண் இயக்கி வருகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal