ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் முதல் இரண்டு பாகங்கள் குறிப்பிட்ட திகதியில் ரிலீஸ் செய்யப்பட்டன. இப்படத்தின் 3ம் பாகம் சி 3 பெயரில் உருவாகி நிறைவடைந்து கடந்த ஆண்டே வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.
கடந்த தீபாவளிக்கு வெளியீடு செய்ய திட்டமிட்டபோது சூர்யா தம்பி கார்த்தி நடித்த காஷ்மோரா வெளியீடு ஆனதால் அப்படத்துக்கு போட்டியாக இருந்து விடக்கூடாது என்பதற்காக சி 3 தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து டிசம்பர் மாதம்செவெளியீடு எண்ணிய போது தெலுங்கில் ராம்சரண் நடித்த துருவா படம் வெளியாவதால் அதன் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காக சி 3 பட வெளியீடு தள்ளிவைக்கப்படும்படி ராம் சரண் தரப்பில் சூர்யாவிடம் கேட்கப்பட்டது. அதை ஏற்று தள்ளிவைத்தார்.
பொங்கல் தினத்தில் வெளியிட எண்ணியபோது விஜய்யின் பைரவா வெளியானதால் நட்பு ரீதியில் சி 3 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
ஒருவழியாக குடியரசு தினத்தன்று வெளியிட முடிவு செய்யப்பட்டு வெளியீட்டுக்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம், காவல் துறை தடியடி என்ற நிலைமை உருவானதால் இந்த நேரத்தில் படத்தை வெளியீடு செய்யவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 9-ம் திகதி சி3 வெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.