ஜாக்கி சான், சோணு சூட் இணைந்து நடித்துள்ள `குங் பூ யோகா’ படம் பிப்ரவரி 3-ம் தேதி 4 மொழிகளில் வெளியாக உள்ளது.
அதிரடி மன்னன் ஜாக்கி சான், சோணு சூட் நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள `குங்பூ யோகா’ படம் பிப்ரவரி 3-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சீனாவின் பிரபல இயக்குநர் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் திஷா படானி மற்றும் தமிழில் ‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்துர், மற்றும் ஆரிஃப் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
நாதன் வாங், கோமெல்-ஷிவான் இசையமைத்துள்ள இப்படத்தை பார்பி டங் தயாரித்து வெளியிடுகிறார்.
முன்னதாக இப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக ஜாக்கி சான் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியா வந்தனர். மும்பை விமான நிலையத்திற்கு நேரில் சென்று சோணு சூட் ஜாக்கி சானை வரவேற்றார். பின்னர் இருவரும் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்கி சான் பாலிவுட்டில் முழு காதல் கதையில் நடிக்க விரும்புதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், `குங் பூ யோகா’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.