சந்தையில் ஸ்மார்ட் போன்கள் அதிகமாக விற்கப்பட்டாலும், மக்கள் விரும்புவது செல்ஃபி எடுப்பதற்கு நல்ல மொபைல் வேண்டுமென்று தான்.
ஆம், இப்போதெல்லாம், கைப்பேசியின் பின்புற காமெராவை யாரும் அதிகமாக பயன்படுத்துவதில்லை. எல்லாம் முன்பக்க காமெராவினால் எல்லாம் செல்ஃபி மையமாகிவிட்டது.
இந்நிலையில், முன்னனி ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான vivo வருகிற 23 ஆம் திகதி ஒரு புத்தம் புதிய vivo v5 plus கைப்பேசி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த கைப்பேசியானது, செல்ஃபி பிரியர்களை கவர்வதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. ஆம் இரண்டு முன்பக்க கமெராவுடன் அறிமுகமாக உள்ளது.
இது, கடந்த நவம்பர் மாதம் வெளியான Vivo V5 யை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும், V5 யை விட விலை அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Vivo V5 Plus இன் சிறப்பம்சங்கள்:
- இரட்டை சிம் வசதி
- 5.5 இன்ச் திரை
- பேட்டரி சக்தி 3000 mAh
- ரேம் வசதி 4GB
- ஃப்லாஷ் வசதி கொண்ட13mp பின்பக்க காமெரா
- 20mp முன்பக்க காமெரா