மோட்டோ X (2017) வீடியோ

ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வழக்கமாக லீக் ஆவதை போல் இல்லாமல், இம்முறை புதிய வீடியோ மூலம் பிரபல ஸ்மார்ட்போனின் அம்சங்கள் லீக் ஆகியுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ X (2017) ஸ்மார்ட்போனின் 360-டிகிரி வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் புகைப்படங்கள் மோட்டோரோலா தயாரிப்பு மையங்களில் இருந்து கசிந்திருப்பதாகவே தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நுகர்வோர் மின்சாதன விழா (CES 2017) அல்லது சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் (MWC 2017) அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை வெளியாகியிருக்கும் புகைப்படங்களிலும், ஏற்கனவே வெளியான புகைப்படங்களிலும் மோட்டோ X(2017) ஸ்மார்ட்போன் ஒரே மாதிரி தான் காட்சியளிக்கிறது. இத்துடன் புதிய மோட்டோ X 2017 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பும் பார்க்க மோட்டோரோலா மோட்டோ Z போன்றே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய மோட்டோ X 2017 ஸ்மார்ட்போனில் போகோ பின்கள் இல்லாததால் இவற்றில் மோட்டோ மாட்ஸ் சப்போர்ட் செய்யாது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் வரும் ஆண்டில் மோட்டோரோலா நிறுவனம் அதிகப்படியான மோட்டோ மாட்ஸ்களை உருவாக்க இருப்பதாக சமீபத்தில் மோட்டோரோலா அறிவித்தது. இதனால் வெளியாக இருக்கும் மோட்டோ  X (2017) ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்காது.
சமீபத்தில் கசிந்திருக்கும் தகவல்களின் படி மோட்டோரோலா நிறுவனம் தனது சாதனங்களின் தயாரிப்பு கட்டணங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது, இதனால் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ யுஎஸ்பி மற்றும் வழக்கமான 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.