ஒருபடத்தில் ஒன்றிரண்டு பேர் புதுமுகங்களாக இருக்கலாம். ஆனால், ஒரு நூறு பேர் புதுமுகமாக அறிமுகமாகமுடியுமா?
தற்போது உருவாகிவரும் மதம் என்கிற படத்தில் 100 புதுமுகங்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். தமிழ்சினிமாவில் இது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.
இதுகுறித்து இயக்குநர் ரஜ்னி கூறும்போது, என் தயாரிப்பாளர் ஹரிஷ்குமார் எனக்கு முழுச் சுதந்தரம் கொடுத்துள்ளார். எனவே என்னால் 100 புதுமுகங்களை அறிமுகப்படுத்தமுடிந்தது.
நடிப்பில் அனுபவம் இல்லாமல் போனாலும் எல்லோரும் யதார்த்தமாக நடிக்கவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். நூறு புதுமுகங்களில் 82 வயது பிபி என்கிற பாட்டியும் ஒருவர்.
அவர் பிரமாதமாக நடித்துள்ளார். காதலர்கள் வேடத்தில் விஜய் சங்கர் – ஸ்வாதிஸ்தா நடித்துள்ளார்கள். ஸ்வாதிஸ்தா, ஏற்கெனவே மிஷ்கினின் சவரக்கத்தி படத்தில் சிறுவேடத்தில் நடித்துள்ளார் என்றார்.
Eelamurasu Australia Online News Portal