உலகில் ஆக அதிக நகைச்சுவை நடிகராக மலேசிய கலைஞர் ஹரித் இஸ்கண்டார்

உலகில் ஆக அதிக நகைச்சுவை உணர்வுடைய நடிகர் எனும் பட்டத்தை மலேசிய கலைஞர் ஹரித் இஸ்கண்டார் (Harith Iskander)வென்றுள்ளார்.

மலேசிய நகைச்சுவை நடிகரும் வழக்குரைஞருமான ஐம்பது வயது ஹரித், அமெரிக்காவில் தலம் கொண்டுள்ள Laugh Factory நிறுவனத்தின் போட்டியில் கலந்துகொண்டார். அதன் முதல் சுற்றில், 56 நாடுகளைச் சேர்ந்த 89 நகைச்சுவைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் மூன்று சுற்றுகள் நடந்தேறின.

இறுதியில் 20 பேருக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இணையத்தள வாக்கெடுப்பு முறை கொண்டு வெற்றியாளர்களை உலக ரசிகர்கள் தேர்ந்தெடுத்தனர். ஃபிலிப்பீன்ஸ், இந்தியா, க்ரீஸ், இஸ்ரேலைச் சேர்ந்த நகைச்சுவை கலைஞர்களும் இறுதிச் சுற்றில் போட்டியிட்டனர்.

வெற்றியாளருக்கு, 100-ஆயிரம் டாலர் ரொக்கப் பரிசும், அமெரிக்காவில் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் படைப்பதற்கான சுற்றுலா வாய்ப்பும் வழங்கப்பட்டன.