ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அடுத்த பரிணாமம்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியின் வரிசையில் இருக்கும் நடிகையின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் தோன்றி தமிழ் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ’கலியுகம்’ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தை ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கிறார்.
இப்படத்தில் நடிகர் கிஷோருடன் புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். இயக்குனர் ப்ரமோத் சுந்தர் இயக்கி, கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் ‘கலியுகம்’ திரைப்படம் இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறதால் இத்திரைபடத்தின் எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.