ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் என செல்வராகவன் பதிவு செய்துள்ளார்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிவர் செல்வராகவன். தனுஷ் அண்ணாகிய செல்வராகவன் தற்போது ராக்கி பட இயக்குனரின் சாணிக்காகிதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வராகவன் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் “ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்” என தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal