கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கழமை குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி காவல் துறைக்கு தகவல் வழங்கப்பட்டது
இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி காவல் துறைக்கு மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் அடங்கிய இரு பெட்டிகளை மீட்டதுடன் இதுதொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக குறித்த பகுதி கிராம அலுவலர் கோணாமலை சேகர் முன்னிலையில் இன்று (15) முற்பகல் 9 மணி முதல் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த அகழ்வின் போது பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal