ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை மீள்குடியமர்த்த உதவி…

Operation #NotForgotten எனும் பிரச்சார செயலின் மூலம் அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அகதி கவுன்சில், MOSAIC, Ads Up Canada Refugee Network ஆகிய அமைப்புகள் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மீள்குடியமர உதவி வருகின்றன.

கடந்த 2019ம் ஆண்டு முதல் பப்பு நியூ கினியா அல்லது நவுருத்தீவில் வைக்கப்பட்டிருந்த 157 அகதிகள் சார்பாக கனடாவில் மீள்குடியமர்த்த விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த கனடா மீள்குடியமர்வு என்பது ஆஸ்திரேலிய- அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தில் விடுப்பட்ட அகதிகளுக்கு நிரந்தரமான வாழ்க்கையை தரும் பெரும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.