தமிழகத்தின் மூத்த பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி காலமானார். அவருக்கு வயது 82. இந்திய நேரப்படி இன்று(6) அதிகாலை அவர் காலமானதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
வழக்கறிஞரான திரு. சோ, பன்முகத் திறன் கொண்டவராகப் புகழ் பெற்றவர். சிறந்த அரசியல் விமர்சகரான அவர், காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய நண்பராகவும், ஆலோசகாராகவும் திகழ்ந்தார். தமிழ்த் திரையுலகில் தனது நகைச்சுவை ஆற்றலால் தடம்பதித்தவர் அவர். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
1999ஆம் ஆண்டு முதல் 2005 ஆண்டு வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகத் . சோ பணியாற்றினார். பத்திரிகைத் துறையில் ஆற்றிய சேவைக்காகப் பல புகழ்பெற்ற விருதுகளையும் பெற்ற சோ. ராமசாமி, துக்ளக் பத்திரிகையை நடத்திவந்தார்.