பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகதத்தின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பல்கலைக்கழகத்தின் முதல் பெண் தலைவர் ஆவார்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 1986-ம் ஆண்டு தனது மேற்படிப்பை அமெரிக்காவில் முடித்தார். தற்போது, கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்துதல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று பென்சில்வேனியா மாநில அறங்காவலர் குழுவால் அவர் ஒருமனதாக அம்மாநில பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
நீலி பெண்டாபுடி, கல்வித்துறையில் ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் சேவையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal