ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது.
முன்னணி சமூக வலைதள சேவையான ட்விட்டர் தனது ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு புதிதாக லேப்ஸ் எனும் அம்சத்தினை அறிவித்து இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு ட்விட்டர் உருவாக்கி வரும் புது அம்சங்களை பயனர்கள் முன்கூட்டியே சோதனை செய்து பார்க்க முடியும்.
யூடியூப் பிரீமியம் சேவையிலும் இதேபோன்று யூடியூப் லேப்ஸ் அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. ட்விட்டர் லேப்ஸ் அம்சத்தில் தற்போது பின்டு கன்வெர்சேஷன்ஸ் அம்சம் வழங்கப்படுகிறது. இது ஐ.ஒ.எஸ். செயலியில் கிடைக்கிறது.

இந்த அம்சம் பயனர்கள் குறுந்தகவல்களை பின் செய்து முன்னிலையில் வைத்துக் கொள்ள வழி செய்கிறது. இத்துடன் டெஸ்க்டாப் தளத்தில் இருந்து நீண்ட நேர வீடியோக்களை பதிவேற்றம் செய்யவும் இந்த அம்சம் உதவுகிறது.
ட்விட்டர் புளூ சேவையை கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஐ.ஒ.எஸ். பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் அம்சம்ங்கள் இன்னும் பரவலாக வெளியிடப்படவில்லை.
Eelamurasu Australia Online News Portal