சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். நடிகை பூஜா ஹெக்டே, கடந்த 2012-ம் ஆண்டு, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான அவர், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் பூஜா ஹெக்டே. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்டார். இதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, “அவரைப் பற்றி கூற ஒரு வார்த்தை போதாது. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்… இனிமையானவர்” என தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal