நடிகர் பிரபு தனது மகன் விக்ரம் பிரபு மற்றும் மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்து இருக்கிறார்.
விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ படம் வெளியானது. இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியானது. தற்போது வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்கும் ‘டாணாக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் பிரபு நடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவருடன் இவர் தந்தை பிரபுவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்நிலையில், நடிகர் விக்ரம் பிரபு, தனது தந்தை பிரபு மற்றும் தாயுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது விக்ரம் பிரபு கூறும்போது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதற்காக சாமி தரிசனம் செய்ய வந்தோம்’ என்றார். பிரபு கூறும்போது, ‘கொரோனாவில் இருந்து நாட்டு மக்கள் அனைவரும் விடுபட வேண்டும். சினிமாத்துறை மட்டுமில்லாமல் எல்லாத்துறையும் சிறந்து விளங்க வேண்டும்’ என்றார்.
Eelamurasu Australia Online News Portal