வாட்ஸ்அப் செயலியின் அந்த அம்சத்தில் விரைவில் மாற்றம்

வாடஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை தானாக அழிந்து போக செய்யும் அம்சம் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் 7 நாட்களில் குறுந்தகவல்கள் அழிந்து போகும் வகையில் இந்த அம்சம் வழங்கப்பட்டது.

 வாட்ஸ்அப்
பின் குறுந்தகவல்கள் 24 மணி நேரத்தில் அழிந்து போகும் வகையில் மாற்றப்பட்டது. அந்த வரிசையில் தற்போது குறுந்தகவல்கள் 90 நாட்கள் கழித்து அழிந்து போக செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய அம்சம் ஏற்கனவே உள்ள 7 நாட்கள் மற்றும் 24 மணி நேரங்களுடன் சேர்க்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் வாட்ஸ்அப் வெப் பதிப்புகளுக்கான பீட்டா வெர்ஷன்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு, அதன் பின் அனைவருக்குமான ஸ்டேபில் பதிப்பில் வழங்கப்படுகிறது.