பாடலாசிரியர் சினேகனின் திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.
தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தனது நீண்ட நாள் காதலியான, நடிகை கன்னிகா ரவியை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. சினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.

கன்னிகா ரவி, கமல், சினேகன்
இதில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், மக்கள் கட்சி நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சினேகன் – கன்னிகா ரவியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ‘தேவராட்டம்’ படத்தில் நடித்துள்ள நடிகை கன்னிகா ரவி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal