விடுதலைப்போராட்டத்தை நேசித்த போராளியான ஜோசெப் மாஸ்டர் யாழில் காலமானார்
ஜோசெப் மாஸ்டர் இறுதி யுத்தத்தின் பின்னராக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு மீள கைதாகி இரண்டுவருடம் சிறையில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
தனது மகளையும் மாவீரராக விடுதலைபோராட்டத்திற்கு ஈகம் செய்திருந்த அவர் போரியல் நூல்களை மொழிபெயர்ப்பதில் முக்கிய பங்காற்றினார்.
தாயகம் நோக்கிய பயணம்’ எனும் லியோன் யூரிஸ் எழுதிய அற்புத படைப்பை கச்;சிதமாய் தமிழாக்கம் செய்திருந்தார் ஜோசெப் மாஸ்ரர்.
ஈழநாதம் வெளியீடாக யாழ்ப்பாணத்திலிருந்து அச்சிடப்பட்ட அந்த நூல் கடுமையான பொருளாதார தடையின் மத்தியிலும் பாடசாலைப்பிள்ளைகள் பயன்படுத்தும் பாடக்கொப்பித்தாளில் அந்நாட்களில் இந்நூல் வெளியிடப்பட்டது.
வரிவரியாய் கோடுகள் ஓட அதன் இடையிடையே அச்சடிக்கப்பட்ட கதைகளம் விரிந்து வாசிப்போரை உள்ளீர்த்து. வாசிப்போரை வசியம் செய்யும் மொழிநடை. ஒரு பிறமொழி படப்பை தன் மொழியாற்றலால் தமழ்மொழிபடைப்பு போல தமிழர் தேசமெங்கனும் இரண்டாம் உலகப்போரின் வலியை ஒவ்வொருவர் மனங்களிலும் உறையசெய்தவர். மாஸ்டர் எளிமையானவர் .நட்பை ,நயத்தை,மற்றவர் மதிப்பையும் மான்பையும் குளைக்காது உரிமையோடு பழகும் ஒரு உன்னத மனிதர்.
வெள்ளிநாதம் இதழுக்காக ஏராளமான மொழிபெயர்ப்பு படைப்புகளையும்,கவிதைகளயும் எழுதியவர்.எத்தகைய உதவியென்றாலும் சலிக்காது செய்த இலக்கிய உழைப்பாளியென முன்னாள் ஈழநாதம் ஆசிரியர் நினைவு கூர்ந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் குருநகரில் தனது மனைவியுடன் மகளின் நினைவுகளுடன் வாழ்ந்து வந்த அவரிற்கு தேச அஞ்சலிக்கின்றது.
Eelamurasu Australia Online News Portal