கரீனா கபூர் சீதை வேடத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியதால், அவருக்கு பதில் கங்கனாவை நடிக்க வைக்க படக்குழு பரிசீலித்து வருகிறதாம்.
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். தற்போது பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஆதிபுருஷ் என்ற பெயரில் ராமாயண கதை படமாகிறது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு ராமாயண படமும் தயாராகிறது. தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள்.
இந்த படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கரீனா கபூரை அணுகியதாகவும், அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. கரீனா கபூர் சீதை வேடத்தில் நடிக்க எதிர்ப்புகளும் கிளம்பின.
இதனால் சீதை வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்தை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதும் விஜயேந்திர பிரசாத், கங்கனா ரணாவத் சீதை வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal