ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய கடைசி நாளில் படக்குழுவினரிடம் ரஜினி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ரஜினிகாந்த் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது. தற்போது சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ரஜினி அடுத்த மாதம் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.
நடிகர் தனுஷ், ஹாலிவுட் படத்தில் நடிக்க, மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் முகாமிட்டு உள்ளார். ரஜினியும் அவர்களுடன் தங்கி இருப்பார் என்று தெரிகிறது. கொரோனா பரவல் குறைவதை வைத்தே அவரது பயண திட்டம் வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா? இல்லையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய கடைசி நாளில் படக்குழுவினரிடம் ரஜினி மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்போது, ‘மேலும் ஒன்றிரண்டு படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை உள்ளது. அதற்கு உடல் ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை. கொரோனா முடிவுக்கு வந்த பிறகே அடுத்த படம் பற்றி முடிவு செய்வேன்.
‘அண்ணாத்த’ படம் என் கரியரில் முக்கியமானதாக இருக்கும். இந்தப் படத்தை எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே கவலையாக இருந்தது. இப்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் நல்லபடியாக முடிந்திருக்கிறது. எல்லோரும் வீட்டுக்குப் போய் பத்திரமா இருங்க. மீதி இருக்கும் பணிகளை கொரோனா குறைந்த பிறகு செய்யலாம் என சொன்னாராம்.
Eelamurasu Australia Online News Portal