நடிகை ரகுல் பிரீத் சிங், தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்குவதும் உண்டு.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், தன்னைப்பற்றி காதல் கிசுகிசுக்கள் தற்போது வராததால் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “கடந்த சில ஆண்டுகளாக இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களுடன் இணைத்து என்னைப்பற்றி பலதரப்பட்ட காதல் கிசுகிசுக்கள் வெளியாகின. அவை அனைத்துமே பொய்யான செய்திகள் என்பதால் அவற்றுக்கு நான் பதில் கொடுக்கவில்லை.
அந்த சமயத்தில் நான் அமைதியாக இருந்ததால், ஒரு கட்டத்தில் அந்த வதந்திகள் மாயமாகி விட்டன. இப்போது என்னைப் பற்றி காதல் செய்திகள் வருவதில்லை. இது நிம்மதியை தருவதாக தெரிவித்துள்ள ரகுல் பிரீத் சிங், இதுவரை தான் யாருடனும் காதலில் விழுந்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal