கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அல்லு அர்ஜுன், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். என்னுடையை ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது புஷ்பா திரைப்படம் உருவாகி வருகிறது.
Eelamurasu Australia Online News Portal