ஃபோட்டோக்களை, அதன் இயல்பு தன்மை மாறாமல் ஸ்கேன் செய்வதற்கு கூகுள் நிறுவனம் ‘ஃபோட்டோ ஸ்கேன்’ என்ற புதிய ஆப் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் இலவசமாக கிடைக்கும். ஸ்கேன் செய்ய வேண்டிய புகைப்படங்களை ஐந்து இடங்களில் படம் பிடித்து, ஒன்றாக இணைப்பதால், இதில் வழக்கமாக ஃபோனின் மூலம் படம் பிடித்தால் வரும் ‘கிளாரிங்’ இருக்காது.
இது பற்றி கூகுள் நிறுவனம்,’பழைய ஸ்கேனர்களை வைத்து ஸ்கேன் செய்வது அதிக நேரம் எடுக்கும். நவீன ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்வதால் அதிகம் பணம் செலவாகும். ஆனால், இந்த ஸ்கேனிங் ஆப் முற்றிலும் இலவசமாகவும், தரம் வாய்ந்த புகைப்படங்களை உருவாக்கும் திறனும் உடையது.’என்று கூறியுள்ளது.