கறுப்பை வெள்ளையாக்க, வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்?- கவிஞர் வைரமுத்து!

500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்ததை அடுத்து, 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதில், 4,000 ரூபாய் மட்டுமே ஒருவர் பெற முடியும் என சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.

இதனை அடுத்து நேற்று தேர்தலின்போது வைக்கப்படுவதைப் போல பழைய நோட்டுகளை மாற்ற வருபவர்களின் கை விரலில் மை வைக்கப்படும் என அறிவித்தது.

இதற்கு பலதரப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் விரல் மை குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், ‘கறுப்பை வெள்ளையாக்கக் கவலைப்படும் தேசத்தில் வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்? ‘மை’ அடிப்பதை நிறுத்துங்கள் தலையிலும் விரலிலும்’ என பதிந்திருக்கிறார்.