மீன் குழம்பும் மண் பானையும் – திரை விமர்சனம்

கரு : அப்பாவிற்கும் பிள்ளைக்குமிடையே நிகழும் ஈகோ மோதல் இறுதியில் எப்படி ஒரு சாரி மற்றும் சில விட்டுக் கொடுத்தல்களால் முடிவிற்கு வருகிறது? எனும் கருவை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் திரைப்படம்.

கதை : மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் காரைக்குடியைச் சேர்ந்த பிரபு மீன் குழம்பு கடை வைத்து பெரும் புள்ளியாக திகழுகிறார். சிறு வயதிலேயே தாயை இழந்த இவருடைய ஒரே மகனான நாயகன் காளிதாஸ் வளர்ந்து பெரியவனாகி கல்லூரியில் படித்து வருகிறார். நாயகி ஆஷ்னா சவேரியும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி ஊடலும் கூடலும் ஏற்பட்டு வருகிறது. கூடவே ஆஷ்னாவால் காளிதாசுக்கு மற்ற கல்லூரி மாணவர்களுடன் முட்டலும் மோதலும் இருக்கிறது.