இலங்கையில் இறுதிப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஆணையாளராக யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய உறுப்பினருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியுள்ளது. திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal