கமல்ஹாசனை கௌரவப்படுத்திய மதன் கார்க்கி

பாடலாசிரியர் மதன் கார்க்கி டூப்பாடூ என்ற இசை யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவர் 1977ம் ஆண்டு நடித்த கோகிலா என்ற படத்தின் காட்சிகளுக்கு புதிய பாடல் ஒன்றை எழுதியுள்ளார் கார்க்கி. இதற்கு அணில் ஸ்ரீனிவாசன் இசை அமைத்துள்ளார்.

“காதல் நொடியே அசையாதே…” என்ற இந்த பாடலின் பின்னணியில் கோகிலா படத்தில் கமலும், ஷோபாவும் இணைந்து நடித்த காட்சிகள் இடம் பெறுகிறது.

“உலகநாயகன் கமல் ஹாசனிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடல் காதல் நொடியே. நாம் அனைவரும் கமல் சாரை பல அவதாரங்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால் அப்போது அவர் வைத்திருந்த சிகை அலங்காரம், அவர் அணிந்த உடைகள் மற்றும் அவருடைய கண்ணாடி ஆகியவற்றை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. அதேபோல் பழம்பெரும் இயக்குநர் பாலுமகேந்திரா சாரையும் நாங்கள் நினைவுகூர விரும்பினோம்.

எனவே தான் அவருடைய முதல் இயக்கத்தில் உருவான கோகிலா படத்தை தேர்ந்தெடுத்தோம்.அந்த படத்தின் காட்சிகளை எங்களுக்கு வழங்கிய ஜி வி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு வெங்கடேஷ் அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.” என்கிறார் டூப்பாடூ இசைத்தளத்தின் தலைவர் கௌந்தேயா.

ntlrg_20161109121607956464