ஸ்மார்ட் புரொஜெக்டர்

எக்ஸ்ஜிமி நிறுவனம் ஹெச்1 என்ற புதிய வகை ஸ்மார்ட் புரொஜெக்டரை வடிவமைத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் வசதி, 900 லூயிமினஸ் அளவில் வெளிச்சம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்இடி திரைகளிலும் இதை பயன்படுத்த முடியும். 1920*1080 பிக்சல் அளவில் படங்களை காணமுடியும். மேலும் வைஃபை வசதி கொண்டது. இதன் விலை 699 டாலர். அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது.