விண்வெளியில் இருந்து வாக்குப்பதிவு செய்த நாசா விஞ்ஞானி

அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து தனது வாக்கினை நாசா விஞ்ஞானி ஷேன் கிம்ப்ரோக் பதிவு செய்தார்.

உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இவர்களைப் போலவே விண்வெளியில் உள்ள அமெரிக்க வீரர்களும் வாக்களிக்க நாசா சிறப்பு ஏற்பாடுகளை கடந்த 1997ம் ஆண்டு முதல் செய்திருக்கிறது.

அதன்படி, ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்தில் ஆய்வினை மேற்கொண்டுவரும் அமெரிக்க விஞ்ஞானி ஷேன் கிம்போர்க், விண்வெளியில் இருந்து தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த வசதியைப் பயன்படுத்தி முதல் வாக்கினை கடந்த 2004-ல் லெரோய் சியாவோ பதிவு செய்திருந்தார்.