தெறி சாதனையை முறியடித்த பைரவா..!

விஜய்யின் ‘பைரவா’ பட டீசர் யூடியுபில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், தெறி படத்தின் டீசரை முறியடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளது.

விஜய்யின் 60- வது படமான ‘பைரவா’ படத்தின் டீசர் யூடியுபில் வெளியிடப்பட்டு ஒரு வாரத்தில் 7 மில்லியன் பார்வைகளை பெற்றது. அதாவது 74,08,914 பார்வைகள். 2,08,926 லைக் பெற்றுள்ளது. இதன் மூலம் ‘தெறி’யின் சாதனையை பைரவா முறியடித்துவிட்டதாக கருதப்படுகிறது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவரும் ‘பைரவா’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வெளியிடப்பட்ட உள்ளதாக படக்குழுவினர் அதிகர்வப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும் இப்படம் 2017- ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறையில் திரையிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.