முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச, அவுஸ்ரேலியா செல்ல விசா கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் யோஷிதவுக்கு அவுஸ்ரேலியா செல்ல அனுமதிக்கப்படாமையினால் யோஷிதவின் இந்த விசா பிரச்சினை தொடர்ந்து அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக காணப்பட்டன.
இந்த நிலையில் யோஷிதவுக்கு விசா வழங்கப்பட வேண்டும் என பலர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கடந்த வாரம் இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதரகம் யோஷிதவுக்கு விசா வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையினால் யோஷித மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
இவ்வளவு கஷ்டப்பட்டு விசா கிடைக்காத சந்தர்ப்பத்திலும் எப்படியாவது விசா பெற்றுக் கொண்டு அவுஸ்ரேலியா செல்ல வேண்டும் என்ற அவசியம் ஏன் யோஷிதவுக்கு ஏற்பட்டுள்ளது.
யோஷித அவுஸ்திரேலியாவுக்கு செல்லவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டமைக்கு வலுவான காரணங்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
யோஷித போலியான தகவல்களை சமர்ப்பித்த அவுஸ்ரேலியா விசா பெற்றுக்கொள்ள முயற்சித்தமையால் விசா மறுக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் கொள்ளையடித்த பெருந்தொகை பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள ராஜபக்ஷ குடும்பம், அவ்வப்போது வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு அதனூடாக பெற்றுக்கொண்ட பணத்தை நாட்டுக்கு கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.