அவுஸ்ரேலியப் பெண் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டார்

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகரான காபுலில் அவுஸ்ரேலிய நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவன சேவகியை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

ஆப்கானிஸ்தானில் பிணைத்தொகைக்கு ஆசைப்பட்டு அங்குள்ள தீவிரவாதிகளை வெளிநாடுகளை  சேர்ந்த பலரை கடத்திச் செல்கின்றனர். பின்னர், கடத்தப்பட்டவரின் நாட்டை சேர்ந்த தூதரகத்தின் மூலம் பேரம்பேசி, பணத்தை பெற்றுகொண்டு கடத்தப்பட்டவர்களை விடுவிப்பது வாடிக்கையாகி விட்டது.

அவ்வகையில், காபுல் நகரின் மையப்பகுதியான கலா-இ-ஃபதுல்லா என்ற பகுதியில் இருந்து அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிவந்த ஒரு பெண்ணை நேற்று துப்பாக்கி முனையில் சிலர் கடத்திச் சென்றதாக ஆப்கான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்னர், இங்குள்ள ஜலாலாபாத் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட அவுஸ்ரேலிய பெண்ணான கெர்ரி ஜேன் வில்சன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டார்.

காபுலில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஆசிரியையாக பணியாற்றிவந்த மற்றொரு அவுஸ்திரேலிய பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் கடத்தப்பட்டார். இந்நிலையில், நேற்று மேலும் ஒரு அவுஸ்திரேலிய நாட்டுப் பெண் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.